முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்க தயிரை பயன்படுத்தி ஃபேஸ் பேக் !!

புளித்த தயிரை முகத்தில் தடவிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். முகம் பொலிவு பெறுவது மட்டுமல்லாமல், சருமத்திற்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும். சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்குவதற்கும், இறந்த செல்களை அகற்றுவதற்கும் தயிர் உதவுகிறது. 

இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தயிர் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் முகப்பருக்கள், தோல் சுருக்கங்கள் பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபடலாம்.
 
தயிர் உணவுக்கு மட்டுமல்ல பல வகையான சருமப் பிரச்னைகளுக்கும் உதவக் கூடியது. அந்த வகையில் தயிர் பயன்படுத்தி ஃபேஸ் பேக் அப்ளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
1 ஸ்பூன் தயிர், 1 சிறிய வாழைப்பழம், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் என மூன்றையும் ஒன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.
 
உங்களுக்கு எண்ணெய் வழிகிறது எனில் இந்த தயிர் 2 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் என கலந்து கெட்டியான பேஸ்ட் பதத்தில் கலந்துக் கொள்ளுங்கள். அதை முகம் மற்றும் கழுத்தைச் சுற்றியும் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து தண்ணீரில் கழுவி விடுங்கள்.
 
இந்த இரண்டு ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை செய்து வர முகப்பருக்கள், கருவளையம், முகச்சுருக்கம், கருமை போன்ற சருமப் பிரச்னைகள் இருக்காது.
 
தயிர், வாழைப்பழம், ரோஸ் வாட்டர் மூன்றும் கலந்து முகத்தில் தேய்த்தால் உங்களுக்கு உடனடி பலன் கிடைக்கும். இதனை ஒரு பேஸ்ட் போல் தயாரித்து முகம்  மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளலாம். இதனை தினமும் செய்ய வேண்டியது அவசியம். அப்படி செய்தால் முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைப்பதை உங்களால் உணர முடியும். சருமம் மென்மையாக இருப்பதற்கும் இது பயன்படுகிறது.
 
தயிர், தேன், எலுமிச்சை சாறு மூன்றும் உங்கள் உடல்நலத்திற்கும் நல்லது. அதே நேரத்தில் சரும பராமரிப்பிற்கும் சரியான தீர்வு இதுதான். மழைக்காலத்தில் சரும பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு இந்த கலவை பயன்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்