முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்வது எவ்வாறு..?

பெண்கள் தாங்கள் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். குறிப்பாக அடர்த்தியான முடி, அடர்த்தியான, வடிவான,  அழகான புருவம் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏனெனில், புருவம் சரியாக அமைந்து விட்டால் கண்ணின் அழகு அதிகரிக்கும்.  முகத்தில் கண் அழகாக இருந்தால் போதும், முக அழகு கூடும்.
புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சில பெண்கள் வாக்சிங் முறையில் புருவங்களில் உள்ள முடிகளை அகற்றுகின்றனர் இது தவறானது. இவ்வாறு செய்வதால் தசைகள் சுருங்கி தொய்ந்து போகிறது. பிளேடு பயன்படுத்தி சிலர் புருவ முடிகளை  சேப் செய்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது.
 
புருவங்களை, திரெட்டிங் முறையில் சீர்திருத்தி அழகாக மாற்றலாம். பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாகவும், சிலருக்கு அடர்த்தி  குறைவாகவும் இருக்கும்.
 
அடர்த்தியான புருவங்கள் உள்ளவர்கள் அழகு நிலையங்களில் செய்யப்படும் திரெட்டிங்கை செய்துகொள்ளலாம். அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் சிறிதளவு விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி வந்தால் புருவ ரோமங்கள் அடர்த்தியாக வளரும். 
முகம் வட்டமாக உள்ளவர்கள், வளைவாக திரெட்டிங் செய்யக்கூடாது. புருவத்தின் நுனியில் மட்டும் வளைத்தால் போதும். சதுரமான முகம்  உள்ளவர்கள் புருவத்தின் நடுவில் வளைவாக திரெட்டிங் செய்துகொண்டால் அழகாக இருக்கும். நீளமான முகம் கொண்டவர்கள் புருவத்தின்  கடைசியில் சிறிது வளைத்துகொண்டால் போதுமானது. இப்படி செய்தால் முகம் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும்.

நீளவட்ட முகமுடையோர் கவனமாக திரெட்டிங் செய்தல் வேண்டும். புருவத்தின் கடைசியிலும் இல்லாமல், முதலிலும் இல்லாமல் சற்றே நகர்த்தி, லேசாக வளைத்து  திரெட்டிங் செய்ய வேண்டும். இதனால் முகம் நீளவட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சியளிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்