மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

செவ்வாய், 4 ஜூலை 2023 (18:27 IST)
தற்போது இளம் வயதினர்களுக்கு கூட மாரடைப்பு நோய் வரும் நிலையில் மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு சில முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
குறிப்பாக சைவ உணவுகள் அதிகம் சாப்பிட்ட வேண்டும் என்றும் காய்கறி பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
 
புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை அறவே செய்யக்கூடாது என்றும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் தான் மாரடைப்புக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 
 
அதேபோல் நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் உடல் பருமன் ஆகியவையும் மாரடைப்புக்கு காரணம் என்பதால் இவை வருவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்