தேங்காப்பூ சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா? ஆச்சரியமான தகவல்..!

ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (19:21 IST)
தேங்காய் பூ சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என்றும் மேலும் ஏராளமான நன்மைகள் இருக்கிறது என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர். 
 
இளநீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் தேங்காய் பூவில் உள்ளதாகவும் தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர்தான் தேங்காய் பூவாக மாறுகிறது என்றும் கூறப்படுகிறது. 
 
தேங்காய் பூ சாப்பிடுவதால் செரிமான அமைப்பு குளிர்ச்சியாகும் என்றும் அசிடிட்டி இரப்பை அலர்ஜி ஆகியவை குணமாகும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் தேங்காய் பூவில் உள்ள ஜெலட்டினாஸ் என்னும் பொருள்  புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. தேங்காய் பூவில் உள்ள வைட்டமின்கள் தாதுக்கள் ஆகியவை ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது என்றும்  உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்றும்  சோர்வில் இருந்து மீட்டெடுக்கும் சிறந்த சிற்றுண்டி ஆகவும் விளங்குகிறது என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் தேங்காய் பூ உடலில் உள்ள செல்களை புதுப்பிக்க தூண்டும் என்பதால் என்றும் இளமையாக வைத்திருக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்