தினம் ஒரு சப்போட்டா... என்ன ஆகும் தெரியுமா?

வெள்ளி, 22 ஜனவரி 2021 (12:27 IST)
தினந்தோறும் அல்லது பொதுவாக சப்போட்டா பழங்களை சாப்பிடுவது எவ்வளவு நன்மைகளை கொடுக்கும் என தெரிந்துக்கொள்ளுங்கள்... 

 
தினமும் இரண்டு சப்போட்டா பழங்களை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் நீங்கும். 
 
ஆரம்பநிலை காசநோய் குணமடைய தினம்தோறும் சப்போட்டா பழ சாருடன், ஒரு நேந்திரன் பழமும் சாப்பிட்டு வந்தால் காச நோய் சில நாட்களில்  குணமடையும். 
 
சீதபேதி குணமாக உடல் உஷ்ணம் ஏற்படும் சமயத்தில் ரத்தத்துடன் கலந்த பேதி உண்டாகும். இதனை சரிசெய்ய சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ந்து பருகி வர வேண்டும். இப்படி செய்து வந்தால் உடல் உஷ்ணமானது குறைந்து சீதபேதி நிற்கும். 
 
பித்தம் நீங்க சிலருக்கு பித்தத்தினால் அடிக்கடி தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதனை நீக்க சப்போட்டா பழத்தை சாப்பிட்டு பின்னர் ஒரு ஸ்பூன் சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் நீங்கும். 
 
சாதாரண காய்ச்சல் குணமாக சப்போட்டா பழச்சாறை குடித்துவிட்டு, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடி, கொஞ்சம் கருப்பட்டி, இவைகளை ஒன்றாக சேர்த்து பொடியாக்கி தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி குடித்துவர சாதாரண காய்ச்சல் குணமாகும். 
 
சளி பிரச்சனை நீங்க சப்போட்டா பழத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் சளி குணமாகும். நாளடைவில் இருமல் தொல்லையிலிருந்தும்  விடுபடலாம். 
 
சிறுநீரக கற்கள் வெளியேற சப்போட்டா பழத்தின் நொறுக்கப்பட்ட விதைகளை சாப்பிட்டு வருவதால் சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதன் மூலம் சிறுநீர் பையில் இருந்து கற்கள் தடையின்றி வெளியேறிவிடும். இதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகளிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்