வோடபோன் நிலை என்ன?? நல்ல பிள்ளையாய் எஸ்கேப் ஆன ஏர்டெல்!

திங்கள், 17 பிப்ரவரி 2020 (18:16 IST)
அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை பற்றிய கணக்கீடு முடிந்து சிறிய தொகையை கட்டியுள்ளது வோடபோன். 
 
வோடபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகைகளில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை ஜனவரி 23 ஆம் தேதிக்குள்  செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  
 
ஆனால், கெடு தேதி முடிந்தும் அப்பணம் செலுத்தப்படாத நிலையில், வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி செலுத்துமாறு  அதிரடியாக உத்தரவிட்டது.  
இதனிடையே ஏர்டெல், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் ரூ.10 ஆயிரம் கோடியை பிப்.20 ஆம் தேதிக்குள், மீதமுள்ள தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்துவதாக தெரிவித்திருந்தது. அதன்படி  ரூ.10 ஆயிரம் கோடியை ஏர்டெல் செலுத்தியுள்ளது. இதை தவிர்த்து ஏர்டெல் இன்னும் ரூ.25,586 கோடி செலுத்த வேண்டியுள்ளது. 
 
அதேசமயம், வோடபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை பற்றிய கணக்கீட்டு பணிகளில் முடிந்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் அரசுக்கு சுமார் ரூ.53,038 கோடி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரூ.2,500 கோடியை மட்டும் வோடபோன் ஐடியா செலுத்தியுள்ளது. மேலும் ரூ.1,000 கோடியை வெள்ளி கிழமைக்குள் செலுத்துவதாக தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்