பட்ஜெட் விலையில் வந்திறங்கிய சாம்சங் கேலக்ஸி M11!!

திங்கள், 30 மார்ச் 2020 (17:47 IST)
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி M11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் வரிசையில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி M11 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. 
 
சாம்சங் கேலக்ஸி M11 எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 
டூயல் சிம் (நானோ), Android 10 அல்லது Android Pie, 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் SoC, சிப்செட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450, 6.4 இன்ச் எச்டி + (720 x 1560 பிக்சல்கள்) டிஸ்பிளே 
 
எஃப் / 1.8 aperture உடன் 13 மெகாபிக்சல் பிரதான ஸ்னாப்பர்,  எஃப் / 2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், எஃப் / 2.2 aperture  மற்றும் 115 டிகிரி பார்வையுடன் 5 மெகாபிக்சல் வைட் அங்கிள் கேமரா, எஃப் / 2.0 aperture உடன் 8 மெகாபிக்சல் கேமரா. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்