வீணான காத்திருப்பு; தள்ளிப்போகும் நோக்கியா 9.3 ப்யூர் வியூ அறிமுகம்!

திங்கள், 6 ஏப்ரல் 2020 (16:04 IST)
நோக்கியா 9.3 ப்யூர் வியூ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி வரி உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி, ஸ்மார்ட்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%  இருந்து 18% உயர்ந்துள்ளது. எனவே, விவோ, ஒப்போ, ஐபோன் வரிசையில் நோக்கியாவும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்துள்ளது. 
 
அதன்படி, நோக்கியா 2.3 விலை ரூ. 7,585, நோக்கியா 110 விலை ரூ. 1,684, நோக்கியா 6.2 ரூ. 13,168,  நோக்கியா 7.2 ரூ.16,330 நோக்கியா 105 ரூ. 1,053, நோக்கியா 2.2 ரூ. 6,320 , நோக்கியா 4.2 ரூ.10,008, நோக்கியா 3.2  ரூ. 8,428 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
நோக்கியா 9 பியூர்வியூ மாடல் ரூ. 2,678 விலை உயர்த்தப்பட்டு ரூ. 52,677 என மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாடலின் புதிய படைப்பாக அறிமுகமாக இருந்த நோக்கியா 9.3 ப்யூர் வியூ வெளியீடு இந்த ஆண்டின் பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளது, அதோடு ஸ்மார்ட்போன் அறிமுகங்களிஅயும் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்