உலகக் கோப்பை அவமதிப்பு : மிட்செல் மார்ஷல் மீது போலீஸார் வழக்குப் பதிவு

வெள்ளி, 24 நவம்பர் 2023 (20:14 IST)
ஐசிசி உலக கோப்பையை ஆஸ்திரேலிய வீரர் தனது காலின் கீழ் வைத்து எடுத்த போட்டோ வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், மிட்செல் மார்ஷல் மீது உத்தரபிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த  நவம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில்,  ஆஸ்திரேலிய அணி மிக திறமையாக  விளையாடியதுடன், லீக் சுற்றுகள் முதல் அரையிறுதி வரை தோற்காத இந்தியாவை  வீழ்த்தி  முறையாக உலக கோப்பையை தட்டி சென்றது.

இந்நிலையில் வென்ற ஐசிசி உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த உலக கோப்பையை  பலவிதங்களில் போட்டோ எடுத்தனர். அதில் ஒன்றுமேல் கால் மேல் கால் போட்டு ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் போட்டோ எடுத்தது சர்ச்சையை  ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனங்களையும் விமர்சங்களையும் எழுந்தன.  

இந்த  நிலையில், பிரதமர் மோடி வழங்கிய உலகக் கோப்பையை அவமதிக்கும் வகையில் மிட்செல் மார்ஷல் பதிவிட்ட புகைப்படம் 140கோடி இந்தியர்களையும் காயப்படுத்தியதாக அமைந்தது.

இந்த நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என உத்தரபிரதேச மாநிலம் அலிகர் காவல் நிலையத்தில் பண்டித் கேஷவ் என்ற சமூக செயற்பாட்டாளர் புகார் மனு அளித்துள்ளார். இது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்