ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டாரா சூர்யகுமார்? அவரே அளித்த விளக்கம்!

vinoth

திங்கள், 11 மார்ச் 2024 (10:24 IST)
கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அதே போல டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் அவர் ஜொலிக்கவில்லை.

சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் பீல்டிங் செய்த போது அவருக்கு கனுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவர் இந்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி அவரே இப்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “அனைவருக்கும் வணக்கம். பலரும் எனது உடல் பிட்னெஸ் குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. நான் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா பிரச்சனைக்காக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது தீவிரமாக பழைய உடல்தகுதியைப் பெற உழைத்து வருகிறேன். விரைவில் உங்களைக் களத்தில் சந்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் நேரடியாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று கூறாததால் சந்தேகம் வலுத்துள்ளது. ஒருவேளை அவர் மும்பை அணிக்காக விளையாடவில்லை என்றால் அது பின்னடைவாக இருக்கும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்