உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்

சனி, 1 ஜூலை 2023 (21:07 IST)
உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது முன்னாள் சேம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த ஆண்டு வரும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.  உலகக் கோப்பை தொடருக்கு 2 அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டி ஜிம்பாவேயில்  நடைபெற்று வருகிறது.

இதில், கலந்து 10 அணிகளில் இருந்து ஜிம்பாவே ஸ்காட்லாந்து நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஓமன், இலங்கை ஆகிய  அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

சூப்பர்6 தொடரில் இன்று வெஸ்ட் – ஸ்காட்லாந்து அணிகள்  மோதின. இதில், டேஸ் வென்ற ஸ்காட்லாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. எனவே வெஸ்ட் இண்டீஸ்  முதலில் பேட்டிங் செய்தது.

இதில், 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 181 ரன்கள் எடுத்தது.  அதன்பின்னர் இலக்கை நோக்கி களமிறஙிய ஸ்காட்லாந்து அண்  43.3 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால், ஸ்காட்லாந்து அணி உலகக் கொப்பி தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் உள்ளது, வெஸ்ட் இண்டீஸ் அணி வாய்ப்பை இழந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்