விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்ய பிடிக்கும் – டிம் பெய்ன் கருத்து!

ஞாயிறு, 15 நவம்பர் 2020 (17:36 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ஸ்லெட்ஜ் செய்வது தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை. இது இந்திய அணிக்கு மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் அளித்துள்ள நேர்காணலில் ‘நாங்கள் கோலியை ஸ்லெட்ஜ் செய்ய விரும்புகிறோன். கிரிக்கெட் ரசிகர்களாக கோலி பேட் செய்வதைப் பார்க்க பிடிக்கும். ஆனால் அவர் அதிக ரன்கள் அடிப்பது பிடிக்காது. அவர் மிகவும் சவாலான நபர். நானும் அதேதான் என்பதால் எங்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு வீரர்களுக்கு இடையே இப்படி நடப்பது இயல்புதான். நான் அனைத்தையும் எதிர்நோக்கியுள்ளேன்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்