கடைசி வரை போராடிய கோலி… இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி!

வெள்ளி, 29 டிசம்பர் 2023 (06:56 IST)
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. கே எல் ராகுல் மட்டும் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 2வது நாள் முடிவில் விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கர் சதமடித்தார். தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 408 ரன்கள் சேர்த்தது. டீன் எல்கர் 185 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்க அணி.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. ஒரு முனையில் கோலி மட்டும் நிலைத்து நின்று விளையாடினாலும், மற்ற வீரர்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை. கோலி 76 ரன்கள் சேர்க்க இந்திய அணி 131 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்