ஆஸ்திரேலுயாவின் இரண்டாம் தர வீரர்களையே ஐபிஎல் விரும்புகிறது… நியுசிலாந்து வீரர் காட்டம்!

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:32 IST)
நியுசிலாந்தின் டெவின் கான்வோவை ஐபிஎல் தொடரில் ஏலம் எடுக்காதது குறித்து சைமன் டூல் பேசியுள்ளார்.

சமீபத்தில் ஐபிஎல் 2021 ஆம் ஆண்டுக்கான ஏலம் நடந்து முடிந்தது. அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல நாட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. அல்லது மிகவும் குறைவான தொகைக்கு எடுக்கப்பட்டனர். ஆனால் ஆஸியின் மேக்ஸ்வெல் போன்றவர்கள் தொடர்ந்து சொதப்பினாலும் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் நியுசி பேட்ஸ்மேன் டெவின் கான்வோவை எடுக்காதது குறித்து அந்நாட்டு முன்னாள் வீரர் சைமன் டூல் ‘என்னதான் சிறப்பாக விளையாடினாலும் நியுசிலாந்து வீரர்களை விட ஆஸ்திரேலியாவின் இரண்டாம் தர வீரர்களை ஏலத்தில் எடுப்பதையே ஐபிஎல் அணிகள் விரும்புகின்றன.’ எனக் கூறியுள்ளார்.  நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் கான்வோ சிறப்பாக விளையாடி 99 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்