அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

Prasanth Karthick

ஞாயிறு, 19 மே 2024 (10:21 IST)
இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் ப்ளே ஆப் தகுதியை சிஎஸ்கே இழந்த நிலையில் தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து ரசிகர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.



2008ல் ஐபிஎல் தொடங்கியது முதலாக இதுநாள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வந்தவர் எம்.எஸ்.தோனி. தற்போது அனைத்துவித கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றவர் ஐபிஎல்லில் மட்டும் விளையாடி வருகிறார். இதனால் ஒவ்வொரு சீசன் முடியும்போது தோனி ஐபிஎல்லில் ரிட்டயர்மெண்ட் அறிவித்து விடுவாரோ என்ற பதற்றம் இயல்பாகவே ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.

இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தோனிக்கு ஃபேர்வெல் கொடுக்கும் விதமாக இந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வெல்ல வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்தது. ஆனால் நேற்று ஆர்சிபியுடனான போட்டியில் சிஎஸ்கே தோற்றதன் வாயிலாக அந்த ஆசை நிராசையாகியுள்ளது.

ALSO READ: அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

இந்நிலையில் இந்த சீசனில் சிஎஸ்கே போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் தோனி தனது ஓய்வு குறித்த முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்பெல்லாம் ஓய்வு குறித்து கேட்கும்போதெல்லாம் தோனி “கண்டிப்பா இல்ல” என்றே சொல்லி வந்தார். இந்நிலையில் ரசிகர்கள் இன்னும் ஒரு முறை கண்டிப்பா இல்லனு சொல்லுங்க தல என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்க தொடங்கியுள்ளனர்.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று தோனி அடுத்த சீசனிலும் தொடர்வாரா அல்லது ஓய்வை அறிவிப்பாரா என்று காத்திருந்து பார்ப்போம்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்