உத்தரகண்ட் மக்களுக்காக எனது சம்பளத்தை அளிக்கிறேன்! – ரிஷப் பண்ட் ட்வீட்!

திங்கள், 8 பிப்ரவரி 2021 (12:02 IST)
உத்தரகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு, வெள்ளத்தால் மக்கள் பலர் உயிரிழந்தது குறித்து ரிஷப் பண்ட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உத்தர்கண்ட் மாவட்டம் சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால் தௌளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்பரித்து வந்த வெள்ளம் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை அடித்து சென்றுள்ளது. இந்த பேரிடர் சம்பவத்தால் 150 பேர் வரை மாயமாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம் உள்ளிட்டவை சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் “உத்தரகாண்டில் பலர் தங்கள் வாழ்வை இழந்தது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அங்கு சிக்கியவர்களை மீட்கவும், மற்றவர்களுக்கு உதவவும் எனது கிரிக்கெட் ஆட்டத்திற்காக வழங்கப்பட்ட தொகையை அளிக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்