என் கையால அந்த கங்காருவ வெட்ட மாட்டேன்! – புதிய கேப்டன் ரஹானேவின் நேர்மை!

வெள்ளி, 22 ஜனவரி 2021 (15:57 IST)
ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெற்று நாடு திரும்பிய கிரிக்கெட் வீரர் ரஹானே செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்தது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு புதிய வீரர்களின் திறமை புகழப்பட்டு வரும் நிலையில் டெஸ்ட் கேப்டனாக பதவி ஏற்ற ரஹானேவையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு இந்திய மக்கள் தடபுடலான வரவேற்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பை திரும்பிய ரஹானேவுக்கும் மக்கள் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். அதில் அவர் வெட்டுவதற்காக வைக்கப்பட்ட கேக்கில் கங்காரு பொம்மை இடம் பெற்றிருந்தது. ஆஸ்திரேலியாவை வென்றதை அவர்களது நாட்டின் அடையாளமான கங்காருவோடு ஒப்பிடுவதாக அது இருந்தது.

இந்நிலையில் அந்த கேக்கை வெட்ட மாட்டேன் என ரஹானே மறுத்துள்ளார். இப்படியாக கேக்குகளை தயாரித்து வெட்டி ஒரு நாட்டை நாம் அவமானப்படுத்த கூடாது என்று கூறியுள்ள அவர், விளையாட்டோடு நாகரிகமும் அவசியம் என்பதை பலருக்கு உணர வைத்துள்ளதாக பலர் பாராட்டியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்