4 ஆண்டுகால ஓய்வு முடிவை திரும்பப் பெற்று சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு திரும்பிய முகமது ஆமீர்!

vinoth

புதன், 10 ஏப்ரல் 2024 (07:30 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் சிறப்பானப் பங்களிப்பை செய்துள்ளது. வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ், சோயிப் அக்தர் ஆகியோர் வரிசையில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகச்சிறு வயதிலேயே (17 வயது) சூதாட்டப் புகாரில் சிக்கி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார் அமீர். பின்னர் நன்னடத்தைக் காரணமாக சீக்கிரமே விடுதலையான அமீர் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாடினார்.

அவர் சிறப்பாக பந்துவீசினாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் அவருக்கும் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் அவர் 2020 ஆம் ஆண்டு திடீரென அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் இப்போது அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பாக் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த வாரம் நடக்க உள்ள நியுசிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடரில் அவர் இடம்பெற்றுள்ளார். இதனால் அவர் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடரிலும் இடம்பெறவுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்