இந்தியாவுக்கு எதிராக புதிய சாதனை படைத்த ஜோ ரூட்!

vinoth

சனி, 24 பிப்ரவரி 2024 (07:48 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிகெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

இது இந்தியாவுக்கு எதிராக அவரின் 10 ஆவது டெஸ்ட் சதமாகும். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த  வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 9 சதங்களும், ரிக்கி பாண்டிங் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் தலா 8 சதங்களும் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்