இப்போது எங்கள் நிரந்தர அணியைக் கன்டறிந்துள்ளோம்… முதல் வெற்றிக்குப் பின் ஹர்திக்!

vinoth

திங்கள், 8 ஏப்ரல் 2024 (07:20 IST)
இந்த ஐபிஎல் சீசனில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று டெல்லி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. டெல்லிக்கு  எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 235 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ரோஹித், இஷான் கிஷான், டிம் டேவிட் மற்றும் ரொமரியோ ஷெப்பர்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.

இதையடுத்து ஆடிய டெல்லி அணி 8 விக்கெட்களை இழந்து 208 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் மும்ப இந்தியன்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதல் வெற்றிக்குப் பின் பேசிய ஹர்திக் பாண்ட்யா தங்கள் அணியின் ஆடும் லெவனை கண்டடைந்துவிட்டதாக பேசியுள்ளார்.

அதில் “இந்த சீசனில் எங்கள் அணிக்கான 12 பேரை நிர்ணயிக்க வேண்டிய தேவை இருந்தது. அதை இப்போது கண்டடைந்து விட்டோம். எங்கள் அணிக்குள் ஓய்வறையில் அன்பும் ஆதரவும் நிறைய இருந்தது. தோல்வியில் இருந்து மீண்டுவர ஒரே ஒரு வெற்றி தேவை என அனைவரும் நம்பினோம். பவர்ப்ளே ஓவர்களில் நல்ல தொடக்கம் கிடைத்தது. அதன் பிறகு ரொமாரியோ ஷெப்பர்ட் துவம்சம் செய்து விட்டார்.  இந்த வெற்றியை அவர்தான் எங்களுக்கு பெற்றுத் தந்துள்ளார். இன்று நான் பந்துவீச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் சரியான நேரத்தில் பந்துவீசுவேன்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்