பந்துகளை சிக்ஸருக்கு தெறிக்கவிடும் அடுத்த கெயில் இவர்தான் ! வைரல் வீடியோ

திங்கள், 14 செப்டம்பர் 2020 (20:27 IST)
சிறுவர்களின் உலகம் அழகானது. கனவுகளும் பெரிது. அதை அறிந்து கொண்டு பெரியவர்கள் அவர்களை ஊக்குவித்தால் அவர்கள் மிகப்பெரிய இடத்தை அடைவார்கள்.

இந்நிலையில் ஒரு சிறுவன் பந்துகளை எப்படிப் போட்டாலும் அதைச் சிக்சருக்குத் தெறிக்க விடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஸ் சோப்ரா தனது சமூக வலைதளப்பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவிட்டு சிறுவன் எப்படி பேட்டிங் செய்கிறான் என்பதைப் பாருங்கள் எனக் கேட்டுள்ளார். சிறுவன் கிறிஸ் கெயிலைப் போல் துடிப்புடன் பேட்டிங் செய்துள்ளார் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்