50 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் – சச்சினை வென்ற அந்த வீரர் யார்?

வியாழன், 25 ஜூன் 2020 (08:12 IST)
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் உருவான சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக்கணிப்பை விஸ்டன் நடத்தியது.

இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் கவாஸ்கர், கபில்தேவ், அசாருதீன், சச்சின், டிராவிட், கங்குலி, தோனி மற்றும் கோலி போன்ற உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட்டின் பைபிள் என அழைக்கப்படும் விஸ்டன் இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக்கணிப்பை பேஸ்புக் மூலமாக நடத்தியது. அதில் சச்சினை வீழ்த்தி டிராவிட் முதல் இடம் பிடித்துள்ளார். கவாஸ்கர் மூன்றாம் இடத்திலும் இந்தியாவின் தற்போதைய கேப்டன் விராட் கோலி நான்காம் இடத்திலும் உள்ளது.

கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சினை விட டிராவிட்டை சிறந்த பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் அவர் வெளிநாட்டுத் தொடர்களில் சச்சினை விட செயல்பட்டுள்ளார் என்பதே காரணம் எனப் பல விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்