20 கிலோ எடை குறைத்தால் ஐபிஎல் தொடரில் எடுத்துக் கொள்கிறேன்… ஆப்கன் வீரருக்கு அட்வைஸ் செய்த தோனி!

வெள்ளி, 8 டிசம்பர் 2023 (15:04 IST)
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் போட்டிக்காக அனைத்து அணிகளும்  தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த தகவலை தெரிவித்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி உள்பட 18 வீரர்கள் தக்க வைத்துக் கொள்ளப்பட்டனர்.

கடந்த சீசனோடு தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் பெயர் மீண்டும் அணியில் இருப்பது கோடிக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

இந்நிலையில் தோனி பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் முன்னாள் ஆப்கானிஸ்தான் வீரர் ஆஸ்கர் ஆப்கன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு போட்டியில் விளையாடி முடித்த போது அவர் தோனியுடன் பேசியுள்ளார். அப்போது ஆப்கான் தொடக்க வீரர் மொஹம்மது ஷசாத் குறித்து பேசியுள்ளனர்.
அப்போது பேசிய தோனி “அவரை 20 கிலோ எடை குறைக்க சொல்லுங்கள் . நான் அவரை ஐபிஎல் அணிக்கு எடுத்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் ஷசாத் மேலும் ஐந்து கிலோ எடை கூடிவிட்டதாக ஆஸகர் ஆப்கன் கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்