சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வெள்ளி, 13 ஜூலை 2018 (14:00 IST)
20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான  சர்வதேச தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் (யு20), 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டி கடந்த 10ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ்(18) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 
 
இதற்கு முன்பாக 2002, 2014 ல் இந்தியா சார்பில் சீமா புனியாவும், கவுர் தில்லானும் வெண்கல பதக்கங்கள் பெற்றுள்ள நிலையில் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று  தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை அடைந்துள்ளார்.
 
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி தங்கம் வென்று வரலாறு படைத்த தடகள வீராங்கணை ஹிமா தாசால் இந்தியா மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறது. உங்களது சாதனை தொடர எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி  ராம் நாத் கோவிந்த், நடிகர்கள் அமிதாபச்சன், அக்‌ஷய் குமார் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்