குழந்தை பிறந்து 40 நாளில் அதை செய்ய முடியாததால் வருத்தம் - நடிகை ஷில்பா ஷீட்டி!

வியாழன், 26 மார்ச் 2020 (17:07 IST)
இந்திய திரைப்பட நடிகையும், பிரபல மாடலமாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. இவர் குஷி, மிஸ்டர் ரோமியோ ஆகிய தென்னிந்திய தமிழ் திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ’வியான்’ என்று பெயரிட்டனர்.

அதன் பின்னர் 5 வருடங்கள் கழித்து வாடகை தாய் மூலம் கடந்த பிப்ரவரி 15ம் தேதி சமீசா ஷெட்டி குந்த்ரா என்ற அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் தந்து குழந்தை பிறந்த 40 நாட்கள் ஆன பிறகு சம்ரதாயப்படி பூஜை செய்யவேண்டுமாம்.

ஆனால், தற்போது கொரோனா காரணமாக அதை செய்ய முடியாமல் வீட்டிற்குள்ளேயே வேண்டிக்கொண்டோம். சில விஷயங்கள் திட்டத்தின் படி நடக்காவிட்டாலும் நாம் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என  இது எனக்கு உணர்த்துகிறது. என கூறி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்