சிரியா - துருக்கி: குண்டுகளுக்கு நடுவே சிரிக்க பழகிய குழந்தைக்கு என்ன ஆனது?

வியாழன், 5 மார்ச் 2020 (15:28 IST)
வெடிகுண்டு சத்தத்திற்கு சிரிக்க பழகிய குழந்தையின் குடும்பம் பாதுகாப்பாக எல்லையைக் கடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அண்மையில் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த காணொளியில் சிரியா நாட்டை சேர்ந்த ஒரு தந்தையான அப்துல்லா முஹம்மத் தன் குழந்தை சல்வாவுக்கு குண்டுகளின் சத்தத்திற்கு சிரிக்க கற்றுக் கொடுப்பார். அந்த காணொளி அனைவரது மனதையும் அசைத்து பார்த்தது.
 
இதனை அடுத்து அந்த குடும்பம் எல்லையைக் கடக்க துருக்கி அரசாங்கம் உதவியது. துருக்கி ஆதரவு பெற்ற சிரியா புரட்சி படைக்கும், சிரியா அரசுக்கும் இட்லிப் பகுதியில் சண்டை நடந்து வருகிறது. இதனை அடுத்து ஏறத்தாழ ஐந்து லட்சம் மக்கள் சிரியா- துருக்கி எல்லையில் அடைக்கலம் புகுந்துள்ளனர். 
 
அப்துல்லாவும் அவரது மூன்று வயது மகள் சல்வாவும் பாதுகாப்பாக எல்லையைக் கடந்ததாகவும், தெற்கு துருக்கியில் உள்ள ஒர் அகதிகள் முகாமும் அழைத்து செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்