மிகப் பெரிய பொருளாதார திட்டத்தை அறிவித்த ஜப்பான்

வியாழன், 28 மே 2020 (16:03 IST)
பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானின் பொருளாதாரத்தை மேலதிக பிரச்சனைகளிலிருந்து தடுப்பதற்காக அந்த நாட்டு அரசாங்கம் 1.1 ட்ரில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
 
உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான ஜப்பானை பொருளாதார மந்தநிலையில் இருந்து மீட்பதற்காக 117 ஜப்பான் யென் மதிப்புள்ள தொகுப்புதவி திட்டத்துக்கு பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது.
 
இதன் மூலம், ஜப்பானின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இதுவரை அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ள தொகுப்புதவி திட்டங்களின் மதிப்பு 2.2 ட்ரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுதான் உலக நாடு ஒன்றால் அறிவிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பொருளாதார தொகுப்புதவி திட்டமும் கூட.
 
இதுபோன்ற பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்புகளிருந்து மீண்டுவர பயன்படும் என்று உலக நாடுகள் கருதுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்