கூட்டம் கூட்டமாக கரைக்கு வரும் வால்ரஸ் கடல் விலங்குகள்

வெள்ளி, 3 அக்டோபர் 2014 (19:42 IST)
வால்ரஸ் எனப்படும் கடல் விலங்குகள் பெரும் எண்ணிக்கையில் வடமேற்கு அலாஸ்காவின் கரையோரத்தில் வந்துகுவிந்துள்ளன.


கடலில் அவை தங்கியிருப்பதற்குப் போதுமான அளவு பனிக்கட்டிகள் இல்லாது போயுள்ளமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
 
பொயின்ட் லே பழங்குடிக் கிராமத்திற்கு வடக்கே, சுமார் 35 ஆயிரம் வரையான வால்ரஸுகள் தாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
சுக்சி கடலின் ரஷ்ய பகுதியிலும் பெரும் எண்ணிக்கையான வால்ரஸுகள் கூட்டம் கூட்டமாக வந்துசேர்ந்துள்ளதாக இயற்கை வளங்களின் பாதுகாப்புக்காக குரல்கொடுக்கும் உலகளாவிய நிறுவனமான டபிள்யூ டபிள்யூ எஃப் (WWF) கூறுகின்றது.
 
பூமியின் வடகோடியான ஆர்ட்டிக் பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் வேகமாக மாறிக்கொண்டிருப்பதையே இந்த வால்ரஸ் கூட்டங்கள் காட்டுவதாக கூறும் WWF அமைப்பு, கோடைகால பனிக் கட்டிகள் குறைந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்