மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் - அஞ்சா நெஞ்சமும், கம்பீரமான பேச்சும் உடைய சிம்ம ராசியினரே நீங்கள் எதற்கும் கலங்காதவர். இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண் கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டார தொடர்புகளில் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்துறையினர் பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
மகம்: உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
பூரம்: எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தாமதப்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவில் நெருக்கடிகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அனைவரையும் அனுசரித்து செல்ல பழகிக் கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது.
உத்திரம் 1ம் பாதம்: எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும்.உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படவும். எனினும் உங்கள் சமயோஜித புத்தியால் அனைத்தையும் சமாளிப்பீர்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 19, 20 - செப்டம்பர் 15, 16
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.