அமெரிக்காவில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் அதிபராக இருந்த குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்பை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் அதிபராக செயல்பட்டு வரும் நிலையில் அவரது பதவிக்காலம் என்பது விரைவில் முடிவுக்கு வர உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உடன் ஜோ பைடன் நேரடி விவாதத்தில் பங்கேற்றார். இதில் ஜோ பைடன் சரியான வாதங்களை முன்வைக்கவில்லை. இதுவும் அவருக்கு எதிராக திரும்பியது. இதனால் ஜோ பைடன் கட்டாயம் அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் விலக வேண்டும் என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.