ஏன் தாடி வளர்க்கல.. Rejected..! 281 வீரர்களை அதிரடியாக நீக்கிய தலிபான் அரசு!

Prasanth Karthick

வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (11:32 IST)

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் தாடி வளர்க்காத வீரர்களை நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை முழுவதும் கண்ட்ரோலில் எடுத்த அமெரிக்க படைகள் அங்கேயே பல காலமாக முகாமிட்டிருந்தன. கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 

அதை தொடர்ந்து தலிபான் அமைப்பு ஆட்சியை கவிழ்த்து தங்கள் ஆட்சியை அங்கு நிலைநாட்டினர். அதுமுதலாக பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை தலிபான் அமைப்பு அங்கு அமல்படுத்தி வருகிறது. பெண்கள் படிப்பது, வெளியே போவதற்கு கூட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு படங்களை பார்க்கக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சமீபத்தில் இஸ்லாமிய சட்டப்படி தாடி வளர்க்காத 281 பாதுகாப்பு வீரர்களை தலிபான் அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. தலிபான் சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாக 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள தலிபான், ஒழுக்க நெறி தவறிய படங்களின் சிடிக்களை விற்றதாக ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்