ஐ.எஸ். தீவிரவாதம் உருவாகக் காரணம் அமெரிக்கா – அதிர்ச்சி தகவல்

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (12:09 IST)
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கம் தோன்றக் காரணம் அமெரிக்காதான் என்று ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார். 
 


 


இது குறித்து அவர் கூறுகையில், “இஸ்லாமிய தேச இயக்கம் உருவாகக் காரணம் அமெரிக்கா என்று அந்த நாட்டு அதிபர் தேர்தல் வேட்பாளரே கூறியிருக்கிறார். அவர் தக்க ஆவண ஆதாரங்களோடுதான் அதைத் தெரிவித்திருக்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் பலத்தைக் குறைப்பதற்காக, இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவை அமெரிக்கா உருவாக்கியது. மேலும், இராக், லிபியா உள்ளிட்ட நாடுகள் தொடர்பாக அமெரிக்கா பின்பற்றிய தவறான வெளியுறவுக் கொள்கைகளால் தான் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தோன்றியது." என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்