இந்த டுவிட்டர் நிறுவனத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கினார். இந்த நிறுவனத்தை வாங்கிய கையோடு, ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கியதுடன், புளூ டிக்கிற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணம் செலுத்த வேண்டுமென்று பயனர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இந்த நிலையில், பயனர்களுக்கு ஒரு நற்செய்தியை டுவிட்டர் அதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். அதில்,டுவிட்டரில் இனிமேல் போன் நம்பரைக் கொடுக்காமலேயே ஆடியோ கால் , மற்றும் வீடியோ காலில் பேசலாம் என்று தெரிவித்துள்ளார்.