15 ஆண்டுகளாக வேலைக்கே செல்லாமல் ரூ.5 கோடி சம்பளம் பெற்ற நபர்!

ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (08:52 IST)
15 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நபர் குறித்த தகவல் தற்போது வெளிவந்து பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 ஒரு சில பெரிய நிறுவனங்களில் யார் வேலையில் இருக்கிறார்கள்? யார் வேலையை விட்டு சென்றார்கள்? என்பது கூட தெரியாத நிலை இருந்து வருகிறது. அந்த வகையில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் வேலையில் இருந்து வெளியேறிவிட்டார் 
 
ஆனால் அவர் வேலையில் இருந்து வெளியேறியது தெரியாத ஹெச்.ஆர் மற்றும் அக்கவுண்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள் அவருடைய வங்கிக் கணக்ககில் மாதா மாதம் சம்பளத்தை டெபாசிட் செய்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக இவர்களுடைய அலட்சியத்தால் அந்த நபருக்கு சம்பளம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதுவரை அவருக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் போடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது 
 
15 ஆண்டுகள் வேலையே செய்யாமல் சம்பளத்தை பெற்று வந்த அந்த நபர் எந்தவித தகவலும் தனது நிறுவனத்திற்கு தெரிவிக்கவில்லை என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஹெச்.ஆர் மற்றும் அக்கவுண்ட்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்