உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று 4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், கார்கின் நகரை ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாகவும் 471 உக்ரைன் ராணுவ வீரர்களைப் பிடித்துவைத்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆயுதங்கள், உணவுகள், மருந்துகள் வழங்கி வருகின்றன. எனவே சர்வதேச அளவில் போருக்கு எதிரான வலுவான நிலையை கூட்டமைப்பு உருவாகியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.