இந்தியா செய்தது ஒரு ஒழுக்கக்கேடு நடவடிக்கை; ஃபோர்ப்ஸ் விளாசல்

சனி, 1 ஜூலை 2017 (18:37 IST)
ஃபோர்ப்ஸ் இதழின் தலைமை ஆசிரியர் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ், பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியா மக்களிடம் நடத்தப்பட்ட மாபெரும் திருட்டு என தெரிவித்துள்ளார்.


 

 
இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஃபோர்ப்ஸ் இதழின் தலைமை ஆசிரியர் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் கூறியதாவது:-
 
இந்திய அதிகாரத்துவம் ஊழல் மற்றும் சோம்பலுக்கு பேர்போனது. இந்திய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை வேதனைக்குரியது. இதனால் தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்துவிடமுடியாது. இதன்மூலம் இந்தியா உலகிற்கு ஒரு தவறான எடுத்துக்காட்டை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்