இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடி, மின் தட்டுப்பாடு, உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் புரட்சி வெடித்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமர் ஆனார். ஆனால் மக்கள் அதிபர் கோத்தாபயவும் பதவி விலக வேண்டும் என கூறி அதிபர் மாளிகையை சூறையாடினர்.
இதனால் கோத்தாபய இலங்கையிலிருந்து தப்பிய நிலையில் ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக உள்ளார். அதிபர் பதவிக்கான தேர்தல் 20ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் இலங்கை மக்கள் இந்த அதிபர் ஆட்சி முறையே வேண்டாம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஜனநாயக ஆட்சி முறையை அமல்படுத்துமாறு அவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளதால், தற்போது மீண்டும் இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட்டுள்ளது. மேலும் 20ம் தேதி நடைபெறும் தேர்தலையும் மக்கள் பலர் புறக்கணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.