அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர். மேலும் இலங்கை அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திரண்ட மக்கள் அரசுக்கு எதிராக ஆவேச கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று இலங்கையின் கோத்தபய அரசுக்கு இருந்த பெரும்பான்மை இழக்கப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து பரபரப்பான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய அரசு கொறடா ஜான்ஸ்டன் ஃபெர்னான்டோ, எந்த சூழ்நிலையிலும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.