பால்கனியில் இருந்து கீழே விழுந்த சிறுவன்: காப்பாறிய பொதுமக்கள்…அதிர்ச்சி வீடியோ

புதன், 31 ஜூலை 2019 (18:53 IST)
6 ஆவது தளத்திலிருந்து  கீழே விழுந்த சிறுவனை, பொது மக்கள் சேர்ந்து மீட்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

சீனாவின் சோங்குய்ங் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6 ஆவது தளத்தில் ஒரு மூதாட்டி வசித்து வருகிறார். அவர் தனது பேரனை வீட்டிலேயே விட்டு விட்டு, மார்கெட்டிற்கு காய்கறி வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், திடீரென அதன் விளிம்புக்கு சென்று வெளிப்புறமாக தொங்கியுள்ளான். இதனை பார்த்து அதிர்ந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக பெரிய போர்வையை வலை போல் பிடித்து கொண்டு கீழே காத்து கொண்டிருந்தனர்.

அப்போது 6 ஆவது தளத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிறுவன், கை நழுவி, நேராக அந்த போர்வையில் விழுந்தான். இதனால் உயிர்தப்பிய சிறுவன், முதலுதவி செய்வதற்காக மருத்துவர்களிடம் கொண்டு செல்லப்பட்டான். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடலில் எந்த காயமும் இல்லை என உறுதியளித்தனர்.



courtesy CGTN

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்