ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமிலி என்ற இளம் பெண் ஆன்லைன் மூலம் சிக்கன் உணவு ஆர்டர் செய்தார். அந்த உணவை டெலிவரி செய்த பிறகு, அவர் பிரித்து பார்த்தார். ஆர்வமாக உணவை சாப்பிட தொடங்கிய போது, பல்லில் ஏதோ கடினமான பொருள் பட்டதை உணர்ந்தார்.
இது குறித்து வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும், ஆர்டர் டெலிவரி செய்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.