ராஜபக்‌சேவின் மனைவியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை

செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (16:03 IST)
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்‌சேவின் மனைவி ஷிராந்தியிடம், வீடு ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


 

 
இலங்கையில், தேசிய வீடுகள் மேம்பாடு அமைப்புக்குச் சொந்தமான வீடுகளில், ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு நிர்ணையிக்கப்பட்ட மதிப்பைவிட குறைவான விலைக்கு ஒதுக்கீடு செய்ய ராஜபக்சே ஆட்சியில் நெருக்கடி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் ராஜபக்‌சேவின் மனைவி ஷிராந்திக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர், ராஜபக்‌ஷேவின் 2 ஆவது மகன் கைதாகி 2 வார நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தியிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்