ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய பறைவாக கழுகு (பருந்து) உள்ளது. எனவே அங்கு அவை போற்றி பாதுகாக்கப்படுகிறது. மேலும், ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமானத்தில் கழுகுகளை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படுவதோடு, அவற்றிற்கு தனி பாஸ்போர்ட்டுகளும் வழங்கப்படுகிறது.
எனவே, சவுதி அரேபியா, பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், பாகிஸ்தான் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்கு விமானம் மூலம் கழுகளை கொண்டு செல்ல முடியும்.
அந்த வகையில், சவுதி அரேபிய இளவரசர் தான் வளர்க்கும் 80 கழுகளை விமானத்தில் எடுத்து சென்றார். பயனிகளோடு பயணியாக கழுகளும் சென்றன. பாதுகாப்பு கருதி, அவை இருக்கைகளின் கீழ் பகுதில் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் கண்களும் கட்டப்பட்டிருந்தன.