செவ்வாய் கிரகத்தில் காணாமல் போன இயந்திர மனிதன்

வியாழன், 20 அக்டோபர் 2016 (11:40 IST)
செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை அனுப்பி வைத்தனர். இயந்திர மனிதன் ஒன்றையும் அதோடு அனுப்பிவைத்தனர். அது செவ்வாய் கிரகத்தில் தரையிறகும் முன்பு, தொடர்பில் இருந்து காணமல் போய் உள்ளது.


 

 
செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை கடந்த 14ஆம் தேதி அனுப்பி வைத்தனர். 
 
இந்த விண்கலம் 19ஆம் தேதி சென்றடையடையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது. அதோடு அதன் சுற்று வட்டார பாதையில் சுற்றி வந்து கிரகத்தை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜியோபரேலி என்ற வட்டவடிவிலான ஆய்வு கலம் டிஜிஓ விண்கலத்தில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கி ஆய்வு செய்யும். இந்த முயற்சி வெற்றி பெற்றால் செவ்வாய் கிரக ஆராய்ச்சில் மேலும் முன்னேற்ரம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் அந்த இயந்திர மனிதன் ஆய்வு விண்கலம் தரையிரங்கி கொண்டிருக்கும் போது தொடர்பில் இருந்து காணமல் போய் உள்ளது. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுவரை அதை பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில் உறுதியாக எதுவும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளானர்.

வெப்துனியாவைப் படிக்கவும்