உக்ரைன் நாட்டின் மீது உலகப் பெரும் வல்லரசான ரஷியா தொடர்ந்து போரிட்டு வருகிறது. ஒன்பது மாதத்திற்கு மேலாக இப்போர் நடந்து வரும் நிலையில், சமீபத்தில், உக்ரைனில் சில பகுதிகளை தங்கள் பிராந்தியத்துடன் ரஷ்யா இணைத்துக்கொண்டது.
இந்த நிலையில், தங்கள் நாட்டின் 4 பகுதிகளை மீட்க உக்ரைன் போராடி வரும் நிலையில், சமீபத்தில் புதின் அப்பகுதிகளில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார்.
மேலும், ஆக்ரமிப்பு பகுதியான கெர்சனில் பொதுமக்களை வெளியேறும்படி அதிகாரிகள் கூறி வந்ததுடன், அப்பகுதியில், மின் சாரம், நீர் உள்ளிட்ட அத்தியாவசி பொருட்கள் துண்டிக்கப்பட்டன.
இதுகுறித்து, உக்ரைன் அரசு, மேற்கூறியவற்றைக் கூறியதுடன், மக்களின் வீட்டுகளில் புகுந்து பொருட்களைப் பறிப்பதாகவும் குற்றம்சாட்டியது.