இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேசிய அல்தாஃப் ஜம்முவில் வசிக்கும் மக்களை இந்திய ராணுவம் எப்படி நடத்துகிறதோ, அதுபோல கராச்சியில் வசிக்கும் மக்களும் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
அல்தாஃபின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அல்தாஃபுக்கு எதிராக தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் அல்தாஃப்புக்கு 81 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2.4 மில்லியன் அபராதமும் விதிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.