உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மத்திய தேசிய பேரிடராக அறிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் மாநிலத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள்,பார், டாஸ்மாக், வணிக வளாகங்கள், மத வழிபாடு கூடுகை இடங்கள், நிச்சல் பயிற்சி,உடற்பயிற்சி நிலையம் ,ஆகிய இடங்களில் மக்கள் கூட வேண்டாம் . பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் எனவும் நேற்று மத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தது.