ஏழுபேர் சம்மந்தப்பட்ட வழககு 27 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் ஏழு பேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பு வெளியிட்டது. அதை அடுத்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆளுநர் அதுகுறித்த எந்த பதிலும் அளிக்காமல் அந்த சட்டம் அப்படியே கிடப்பில் உள்ளது.
அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா நார்விச் நகர மேயர் தமிழக ஆளுநருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் ‘ எழுவர் சம்மந்தப்பட்ட விசாரணையில் முரண்பட்ட அறிக்கைகளும் கலவையான சாட்சியங்களும் உள்ளன. எனவே 28 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்ட அவர்களை தற்போது அவர்கள் குடும்பத்தோடு வாழ விடுவதே சரியானதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.