இந்தியாவில் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வருபவர்களால் கொரோனா வைரஸ் தங்களுடைய நாட்டிலும் அதிகம் பரவுவதாக மலேசியா கருதியதை அடுத்து இந்தியா உள்பட 3 நாட்டைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதனால் மலேசியாவுக்கு செல்லும் மாணவர்கள், ஆய்வாளர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலருக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. நீண்டகால குடியிருப்பு உரிமை வைத்திருந்தாலும் கூட இந்தியாவில் இருந்து மலேசியா வருவதற்கு அனுமதி இல்லை என மலேசிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு மலேசிய அரசு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் மலேசியாவுக்கு வர இந்த ஆண்டு இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் இந்த தடையை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது