இதுகுறித்து, ஆசிரியை சோனி தன் நண்பர் அனில் என்பவரிடம் கூறியுள்ளார். பின்னர், இருவரும் இணைந்து விவேக்கை ஒரு ஓட்டலுக்கு அழைத்துள்ளனர். அதன்பின்னர், மூவரும் ஓட்டலில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பிற்குப் பின் விவேக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆசிரியை சோனியை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில், சோனி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். அருகில் உள்ளோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.