சம்மந்தப்பட்ட அந்த பெண் தனது ஐபோனை ரிப்பேர் செய்ய சேவை மையத்தில் கொடுத்துள்ளார். அங்கு பணியாற்றிய இரு நபர்கள் போனில் இருந்த அந்த பெண்ணின் நிர்வானப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவரின் பேஸ்புக் ப்ரொபைலில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த பெண் மன உளைச்சல் அடைந்த நிலையில் 5 மில்லியன் டாலர் நிவாரண நிதி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதையடுத்து ஐபோன் நிறுவனம் அந்த தொகையைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.